தாமிரபரணி நதியின் பழமை பெருமை

தாமிரபரணி நதியின் பழமை பெருமை

தாமிரபரணி ஆற்றுப்படுகையில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 சிவலிங்க ஸ்தலங்கள் உள்ளன. அவை நவ கைலாயம் என் இன்று அழைக்கப்படுகின்றன.

அதே போன்று தாமிரபரணி நதிக் கரையில் 9 பெருமாள் ஸ்தலங்கள் உள்ளன. அவை நவ திருப்பதி என் அழைக்கப்படுகின்றன.

தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலையில் இருந்துதான் அகஸ்திய தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தார்,

மகாபாரதத்தில் தாமிரபரணி நதி பற்றி பின்வருமாறு குறிப்பு உள்ளது: “குந்தியின் மகனே! மோட்சத்தை அடைய கடும் தவம் புரிந்த முனிவர்களின் ஆசிரமத்தில் இருந்த தாமிரபரணி பெருமையை உனக்கு நினைவுபடுத்துகிறேன்” என தர்மரைப் பார்த்து முனிவர் சொல்வதாக பாடல் உள்ளது.

காளிதாஸரின் ரகுவம்சம் நூலில் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் விளைந்த உயர்தர முத்துக்களைக் கொண்டு வந்து ரகுவின் காலடியில் பணிந்த்தாக பாடல் உள்ளது.

தாமிரபரணி இலங்கை வரை பாய்ந்து கொண்டிருந்தது என கிரேக்க பயணக் குறிப்பு உள்ளது. இலங்கையை “தாம்ரபர்ணே” என அழைக்கும் குறிப்பு உள்ளது.