தாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சிறப்பு மிக்க தாமிரபரணி மஹா புஷ்கர் விழா

புரட்டாசி 27 முதல் ஐப்பசி 6 வரை (அக்டோபர் 12 முதல் அக்டோபர் 23 வரை)

அகஸ்திய மஹாமுனியால் தமிழக்த்திற்கு தாமிரபரணியும், காவேரியும் கிடைக்கப்பெற்றோம். அப்படிப்பட்ட புண்ணிய நதிகளை நாம் தூய்மையாகவும், புனிதமாகவும் ஆக்கி நமது அடுத்த தலைமுறைக்கு வழங்குவோம்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை 12 ராசிகளில் 12 நாட்கள் அமர்ந்து அனுக்ரஹம் தருகிறார். இந்த வருடம் விருச்சிக ராசியான தாமிரபரணியில் ப்ரவேசிக்கிறார்.

மஹா புஷ்கர நாட்களில் தாமிரபரணியில் நீராடி புண்ணியம் பெறுவோம். மஹாபுஷ்கர நாட்களில் தாமிரபரணி நதியில் ஒரு முறை நீராடினால், லட்சம் முறை காயத்ரி மந்திரம் ஜபித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.